நாமக்கல் :
சேலம் பெரியார் பல்கலையின் செனட் உறுப்பினராக, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலையின் ஆட்சிமன்றக்குழு (செனட்) உறுப்பினராக, நாமக்கல் எம்எம்ஏ ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய 16வது, தமிழக சட்டசபையின் காலம் முழுவதும் அவர் அந்த பதவியில் செயல்படுவார். இதற்கான உத்தரவை தமிழக சட்டசபை செயலகத்தின் முதன்மை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.