Close
ஜனவரி 7, 2025 6:06 மணி

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற, போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கில் கல்லூரி சேர்மன் பெரியசாமி பேசினார்.

நாமக்கல் :
தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் அமைந்துள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி தலைமை வகித்தவார். கல்லூரி முதல்வர் அசோகன் முன்னிலை வகித்தார். முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பேசினார்.

அப்போது, அரசு மற்றும் காவல்துறை எவ்வாறு போதைப் பொருள் உபயோகத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறித்து விளக்கம் அளித்தார். பேராசிரியர்கள் மற்றும் திரளான கல்லூரி மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top