Close
ஜனவரி 8, 2025 3:11 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா..!

சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

திருவண்ணாமலை சின்னக் கடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அய்யங்குல கரையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுடன் இணைந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கோயில் அண்ணாமலையார் கோயிலுடன் இணைந்த கோயிலாகும். அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு. பின்னர் வெற்றிலை மாலை. வட மாலை. துளசி மாலை சாற்றப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்

கீழ்பெண்ணாத்தூரில் மின்வாரிய அலுவலக முகப்பில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 32 வது அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

காலை மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் மின்வாரிய அதிகாரிகள் ,அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள், என பலர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

ஆரணி
ஆரணி நகரில் சூரிய குளம் அருகே அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், தச்சூர் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர், சார்ப்பனார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவில் அருகாமையில் உள்ள வரத வீர ஆஞ்சநேயர் கோவில், புதுகாமூர் பகுதியில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர், கங்கை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சஞ்சீவி ராய அனுமான் கோவில் ஏ.சி.எஸ்.நகர் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களிலும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top