Close
ஜனவரி 8, 2025 8:11 காலை

நாமக்கல்லில் 2ம் தேதி மாவட்ட திமுக மகளிர் அணி,மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கூட்டம்..!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல் :

நாமக்கல்லில் 2ம் தேதி, கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், ராஜேஷ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

நாமகக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம், வருகிற 2ம் தேதி காலை 11 மணிக்கு, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்துகளுக்கான மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், சட்டசபை தேர்தலுக்காக, பூத் வாரியாக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top