கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை இரு நாட்களாக எண்ணப்பட்டது மொத்த உண்டியல் காணிக்கை ரூபாய் 5,25,77,520 ரொக்கமும்,229 கிராம் தங்கமும்,2380 கிராம் வெள்ளியும் வருவாய் வந்துள்ளது என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உண்டியல் 19.12.2024 அன்று கார்த்திகை தீப பௌர்ணமி உண்டியல் எண்ணப்பட்டது
அப்போது, கோயில் உண்டியலில் 2 கோடியே 83 லட்சத்து 92 ஆயிரத்து 520 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 164 கிராம் தங்கம், 1.020 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
ரூபாய் 2,41,85,000
அண்மையில் தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததால் உண்டியல் காணிக்கைப் பணம் அதிகமாக வந்துள்ளது. எனவே, குறிப்பிட்ட சில உண்டியல்களில் சேகரமாகி இருந்த காணிக்கை பணம் மட்டுமே எண்ணப்பட்டது. மீதமுள்ள உண்டியல்களை எண்ணும் பணியை மாதக் கடைசியில் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று உண்டியல் எண்ணப்பட்டது . அப்போது, கோயில் உண்டியலில் ரூபாய் 2,41,85,000/ ரொக்கமும், 65 கிராம் தங்கமும், 1360 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
மொத்த உண்டியல் காணிக்கை ரூபாய் 5,25,77,520 ரொக்கமும்,229 கிராம் தங்கமும்,2380 கிராம் வெள்ளியும் வருவாய் வந்துள்ளது என என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.