Close
ஜனவரி 4, 2025 3:15 காலை

எருமப்பட்டி பகுதியில் 3ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

மின் நிறுத்தம் -கோப்பு படம்

நாமக்கல் :
எருமப்பட்டி பகுதியில் வரும் 3ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கோட்டத்தில், சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

இதனால், எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, காவரக்காரப்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை பெறும் பகுதிகளில், வரும் 3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top