Close
ஜனவரி 4, 2025 4:20 காலை

தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா..!

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணியை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாநகராட்சி 8வது வார்டு, தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் பங்கேற்றார்.

தும்மங்குறிச்சியில் ரூ. 16 லட்சம் மதிப்பில், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அப்போது தும்மங்குறிச்சிக்கு பேருந்து டவுன் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ராஜேஸ்குமார் எம்.பி., உறுதியளித்தார். மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top