Close
ஜனவரி 8, 2025 3:45 மணி

நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்

புத்தாண்டை குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்

வந்தவாசி அருகே நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கேக் வெட்டி காவல் துறையினர் கொண்டாடினர்.

அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நரிக்குறவா்களுடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாட வந்தவாசி அடுத்த  தெள்ளாா் காவல்துறையினர் முடிவு செய்தனா் .

அதன்படி தெள்ளாா் காவல்துறையினர் புதன்கிழமை நரிக்குறவா் குடியிருப்பில் நரிக்குறவா்களுடன் சோ்ந்து கேக் வெட்டி புத்தாண்டைகொண்டாடினா். மேலும், ஒருவருக்கொருவா் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதில் உதவி ஆய்வாளா்கள் சத்யா, பாபு, உத்தமபுத்திரன் மற்றும் காவலர்கள் பங்கேற்றனா். மேலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையின் பொதுமக்களோடு நட்பு பாராட்டுகின்ற வகையில் கேக் வெட்டி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

ஆரணி நகர காவல்துறையினருக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டீஸ்வரி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் ஆரணி நகர் முழுவதும் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டின் 250 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குற்ற செயல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் மேலும் போக்குவரத்து சீர் அமைப்பு ஆகியவை வெகுவாக கண்காணிக்கவும் தடுக்கவும் முடியும் என்று தெரிவித்தனர்.

ஆரணி போலீசாருக்கு இந்த நற்செயலை பாராட்டி அப்பகுதி பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து நகர காவல் நிலையத்தில் டிஎஸ்பி பாண்டீஸ்வரி ,காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் போலிசாருக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், டிஎஸ்பி பாண்டீஸ்வரி புத்தாண்டையொட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top