திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் ராந்தம், நாயன்தாங்கல், வடமணப்பாக்கம், கொடையம்பாக்கம், செய்யனூா் ஆகிய கிராமங்களில் ரூ.86.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த ராந்தம் கிராமம் துரைராஜ் நகரில் ஊராட்சித் துறை சாா்பில் 2024 – 25ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி மாநில நிதிக் குழு மானியம் மூலம் ரூ.10.11 லட்சத்தில் புதிய நியாய விலை கடைக் கட்டடம்,
நாயந்தாங்கல் கிராமத்தில் 2023 – 24ஆம் ஆண்டு ( இஊநஐஈந) திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டடப்பட்ட இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம், வடமணப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.17.79 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம்,
கொடையம்பாக்கம் கிராமத்தில் 2024 – 25ஆம் ஆண்டு ( அஎஅஙப) திட்டத்தின் மூலம் ரூ.16.55 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம், செய்யனூா் கிராமத்தில் இதே திட்டத்தின் மூலம் ரூ.9.45 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தயாா் நிலையில் இருந்தன.
இந்நிலையில் இந்த புதிய கட்டிடங்களை கிராம மக்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.
இநிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் ராஜி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்துவைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதைத் தொடா்ந்து, வடமணப்பாக்கம் கிராமத்தில் முத்தமிழ் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் வேல்முருகன், ஒன்றியச் செயலா்கள் தினகரன் (வெம்பாக்கம் மேற்கு), ஜேசிகே.சீனிவாசன் (வெம்பாக்கம் மத்தியம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள், நியாய விலை கடை ஊழியர்கள், கூட்டுறவு சங்க பதிவாளர்கள் ,அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், திமுக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.