திருவண்ணாமலையில் இறந்த மனைவி உடலுடன் மூன்று நாட்களாக கணவர் வீட்டில் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் அரச மரத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் செங்கம் சாலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வேலை செய்து வந்தார். இவரது கணவர் லோகநாதன் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக விஜயகுமாரி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது . இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இருந்த வீடு மூன்று நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் விஜயகுமாரி உடன் வேலை செய்பவர்கள் அவரைத் தேடி வந்த போது லோகநாதன் கதவை திறக்கவில்லையாம்.
மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் தெருவில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளனர் .
இதனைடுத்த்து மாமன்ற உறுப்பினர் திலகம் ராஜாமணி மற்றும் திருவாசிகள் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்த போது விஜயகுமாரியில் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. மனைவி இறந்தது தெரியாமல் அவரது கணவர் மூன்று நாட்களாக இறந்த உடலுடன்இருந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து விஜயகுமாரியின் உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வந்த பிறகு முழுமையான விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்