Close
ஜனவரி 4, 2025 11:24 மணி

நைனாமலை கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணி: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு..!

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு, ரூ. 30 கோடி மதிப்பில், மலைப்பாதை அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:

நாமக்கல் அருகே, நைனாமலை வரதராஜபெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகில் உள்ள நைனாமலை உச்சியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,700 அடி உயரத்தில் உள்ள கோயிலுக்கு, 3600 குறுகிய படிக்கட்டுகள் வழியாக நடந்து செல்ல வேண்டும்.

இதற்கு தென் திருப்பதி என்ற சிறப்பு பெயரும் உண்டு. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் இக்கோயில் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதற்காக நாமக்கல், சேலம், ராசிபுரம் ஆகிய பகுதியிலிருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இக்கோயிலுக்கு வரும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பல பக்தர்கள், படி ஏறி செல்ல முடியாததால், மலை அடிவாரத்தில் உள்ள உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

எனவே, அனைத்து பக்தர்களும் எளிதாக, மலை உச்சியில் உள்ள வரதராஜபெருமாள் கோயிலுக்கு செல்லும் வøயில் மலைப்பாதை அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழக சுற்றுலாத்துறையின் மூலம் ரூ. 13.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையால் ஏற்கனவே மண் பாதை அமைக்கும் பணி முடிவுற்றது.

கடந்த மாதம், நாமக்கல், பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்ற, அரசு விழாவில், கலந்துகொண்ட, தமிழக முதல்வர் ஸ்டாலின், நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் தார் சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தார்சாலை அமைக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளைசேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் கண்காணிப்புப் பொறியாளர் சசிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வருகின்ற புரட்டாசி மாதம் நடைபெற உள்ள, நைனாமலை கோயில் திருவிழாவிற்கு முன்பு புதிய சாலைப்பணிகளை முடித்து, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நிõழ்ச்சியில், நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திருகுணா, சேந்தமங்கலம் உதவிக்கோட்டப் பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவிப்பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top