Close
ஜனவரி 8, 2025 9:38 மணி

புதுப்பாளையம் ஊராட்சியில் புதிய கட்டிடங்கள் திறந்து வைத்த எம் எல் ஏ

நியாய விலைக் கடையை திறந்து வைத்த சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 63 லட்சத்தில் புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புது பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளில் ரூபாய் 63 லட்சத்திலும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரளாதேவி பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது;

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது என்னிடம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒரு சில கோரிக்கைகளை வைத்தனர் அந்த கோரிக்கையின் அடிப்படையில் கொரடாம்பட்டு ஊராட்சிக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சத்தில் புதிய பொது விநியோக கடையும், மாதா கோவில் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சத்தில் புதிய பொது விநியோகம் கடையும், தொரப்பாடி ஊராட்சியில் ரூபாய் 9 லட்சத்தில் புதிய பொது விநியோக கடையும்       ஓர்ரந்தவாடி ஊராட்சியில் புதிய மேல்நீர்  தொட்டியும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சத்தில் பால் உற்பத்தி மையத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, என ஐந்து ஊராட்சிகளில் மொத்தம் 62.64 லட்சத்தில் புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்துள்ளோம்.

புதிய மேல்நீர்  தொட்டி மூலம் மக்கள் தங்களின் தாகத்தை போக்குவதற்காகவும் பொது விநியோகக் கடை மூலம் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அங்கும் இங்கும் அலையாமல் தங்கள் பகுதியில் ரேஷன் பொருட்களை பெற்று மகிழலாம். அதேபோல் பால் உற்பத்தி மையத்தின் பால் விநியோகங்களை செய்து அரசு வழங்கும் திட்டங்களை முறையாக பயன்படுத்தலாம். எல்லா திட்டங்களும் கிராம மக்களை தேடி உங்களுக்காக தமிழக அரசு வழங்கி வருகிறது என சரவணன் எம்எல்ஏ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், நிர்மலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ரவிச்சந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top