Close
ஜனவரி 6, 2025 5:33 காலை

தேசிய ரிங் ஃபைட் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் வீரர்களுக்கு எம்எல்ஏ எழிலரசன் பாராட்டு

ஆந்திராவில் நடைபெற்ற எட்டாவது தேசிய ரிங் ஃபைட் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் வீரர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் பெருமாள் கோவில் தெரு தொகுதியில் அமைந்துள்ளது இஷின்று கரேத்தே தற்காப்பு பயிற்சி பள்ளி . இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்காப்பு கலைகள் பயின்று வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது புதியதாக ரிங் ஃபைட் எனும் தற்காப்பு கலை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூலில் எட்டாவது தேசிய ரிங் பைட் சேம்பியன்ஷிப் போட்டி டிசம்பர் 27முதல் 29 வரை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் 12 வயதுக்கு கீழ் மற்றும் 12 முதல் 25 வயதிற்கு மேல் என இரு பால் மாணவிகளுக்கான போட்டி ஆறு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 8 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற நிலையில் ஜெய்விக், வெற்றி , வர்ஷா ஆகிய மூவர் தங்கம் பக்கங்களையும், ரோஹித் , கவிஅரசன் ஆகிய இருவர் வெள்ளி பதக்கமும் மற்றும் ஒட்டுமொத்த குழு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று காஞ்சிபுரத்துக்கு பெருமை சேர்த்தது.

இவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா தனியார் அரங்கில் தலைமை பயிற்சியாளர் நூர்அகமது தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றி பெற்ற கோப்பைகளை வழங்கினார்.

மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தற்போது கற்கும் விளையாட்டுகளுக்கு போட்டிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு, தமிழக அரசு தரும் ஊக்கத்துடன் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் புதிய ரிங் பைட் கலை குறித்து விளக்க பயிற்சியும், தலைமை பயிற்சியாளர் நூர்முகமது தனது உடலின் மார் பகுதி மேல் கருங்கற்களை வைத்து உடைக்கும் சாகசத்தை செய்தி காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது.

இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் திலகர், சந்துரு பயிற்சி மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top