Close
ஜனவரி 7, 2025 5:27 மணி

ஆங்கிலப் புத்தாண்டில் நாமக்கல் டாஸ்மாக் கடைகளில் எவ்ளோ மதுபான விற்பனை தெரியுமா..!

கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் ரூ. 7.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 169 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு வழக்கமாக ரூ. 1.50 கோடி முதல் 2 கோடி வøர் மதுபானங்கள் விற்பனையாகும். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், கூடுதல் மதுபானங்கள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, கடந்த டிச. 31ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் ரூ. 3.90 கோடி மதிப்பில் பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனையானது.

புத்தாண்டு தினமான ஜன. 1ம் தேதி ரூ. 4 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானது. ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளில், 2 நாட்களில் மொத்தம் ரூ. 7.90 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top