Close
ஜனவரி 8, 2025 8:05 காலை

புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம் : எம்எல்ஏ ராமலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல்..!

புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்த்துக்குள்ளானதில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவருபவர்களை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். எம்எல்ஏ ராமலிங்கம் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் நவணி பஞ்சாயத்து பள்ளிப்பட்டி, ஓலப்பாளையம் பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் 63பேர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ் மூலம் மூலம் சென்றிருந்தனர்.

கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று, ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே இலக்கியம்பட்டி எனும் இடத்தில் அவர்கள் வந்த பஸ் திடீரென்று ரோடு ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த பஸ்சில் பயணம் செய்த, 20க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டாக்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவருடன் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கவுதம், அரசு டாக்டர்கள் ரகுகுமரன், மணிகண்டன், மற்றும் திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், சின்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top