Close
ஜனவரி 7, 2025 5:47 காலை

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் : முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை..!

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு.

நாமக்கல்:

நடப்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

இன்று 6ம் தேதி தொடங்க உள்ள தமிழ்நாடு சட்டடைக் கூட்டத் தொடரில், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, ஈடு செய்யும் விடுப்பை ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப் படுத்துவது,

அண்ணா காலத்தில் கொண்டு வரப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் மீண்டும் நடைமுறைப் படுத்துவது ஆகியவற்றிற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மேலும், இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைக் களைய வேண்டும். 2004-2006 ஆசிரியர்களின் தொகுப்பூதியக் காலத்தை காலமுறைப் படுத்தவேண்டும்,

ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top