Close
ஜனவரி 7, 2025 6:05 மணி

பெரியபாளையம் அருகே காணாமல் போன கூலி தொழிலாளி ஏரியில் சடலமாக மீட்பு

கூலி தொழிலாளி சுப்பிரமணி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்காத்தா குளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணி (வயது42).

இவருக்கு திருமணம் ஆகி மனைவி பவானி, மகள் பவித்ரா,ஒரு மகன் தமிழரசு உள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வசிக்கும் பகுதியில் எதிரே உள்ள வடமதுரை ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை

இது குறித்து அவரது குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடியும் சுப்பிரமணியை கிடைக்காத நிலையில். இன்று காலை ஏரியில் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பகுதி மக்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஏரியில் இறந்து கிடந்த சுப்ரமன்னியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன கூலி தொழிலாளி ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top