காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 710 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்து, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டார்..
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சுருக்கு முறை திருத்தம் 2025 பணிகள் நடைபெற்று கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதங்களில் நான்கு சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்கு சாவடிகளிலும் நடைபெற்று நீக்கல் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் குறித்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்47 ஆயிரத்து 628 படிவங்கள் பெறப்பட்டது. இதில் 47 ஆயிரத்து 84 படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட சார் ஆட்சியர் ஆஷிக்அலி, வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் மற்றும் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.
இன்று வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 710 பேர் உள்ளதாகவும் , இதில் 6,70,932 வாக்காளர்களும், பெண் வாக்காளர்கள் 7,10,561 மற்றும் 217 இதர வாக்காளர்கள் உள்ளனர்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 47 ஆண் வாக்காளர்களும் , 2,00,088 பெண் வாக்காளர்களும், 62 இதர வாக்காளர்கள் என மூன்று லட்சத்து 94 ஆயிரத்து 557 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தனி தொகுதியில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 913 ஆண் வாக்காளர்களும், 2,06, 199 பெண் வாக்காளர்களும், 68 இதர வாக்காளர்கள் என நாலு லட்சத்து 180 வாக்காளர்கள் உள்ளனர்.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுத்த வரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 715 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 41ஆயிரத்து 193 பெண் வாக்காளர்களும் , 54 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,71, 962 வாக்காளர்கள் உள்ளனர்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 897 ஆண்பாக்காளர்களும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 81 பின்வாக்காளர்களும் 33 இதர வாக்காளர்கள் என மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 111 வாக்காளர்கள் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 39,629 பேர் அதிகமாக உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் வருவாய் கோட்ட அலுவலகங்கள் வட்டாட்சியர் மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார். மேலும் தொடர் திருத்தம் நடைபெறுவதால் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டார்.