பார்வையற்றவர்களையும் புத்தக ஆர்வலராக மாற்றும் செயல்திட்டத்திற்கு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவிந்தவாடி அகரம் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செயல்முறை விளக்கி , பரிசு தொகை காண்பித்து வாழ்த்து பெற்றனர்..
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தக நிறுவனத்தின் சார்பில் மாநில அளவிலான பள்ளி புத்தக மேம்பாட்டு பயிற்சி போட்டி நடைபெற்றது.
புத்தக ஆர்வலர் அதிக அளவில் வளர்ந்து வரும் நிலையில் பார்வை திறன் கொண்டவர்களையும் புத்தக ஆர்வலராக மாற்ற, புத்தகத்தினை ஆடியோவாக மாற்றி எளிதில் அவர்கள் கேட்டறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி போட்டி நடைபெற்றது. இதில் மாநில அளவில் 70 குழுக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும் இரண்டாம் பரிசாக ஐம்பதாயிரமும் மூன்றாம் பரிசாக 10,000 வழங்கப்பட்டது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் 10 குழுக்கள் கலந்து கொண்ட நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த ஐந்து மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சக்ரபாணி அனுமதியுடன், முதுகலை ஆசிரியர் சங்கரின் வழிகாட்டுதலுடன் பயிற்சி அளித்து போட்டியில் பங்கேற்று செயல்படுத்தினர்.
இதற்கு மாநில அளவில் மூன்றாம் பரிசு வென்று ரூபாய் 10 ஆயிரம் மாணவர்கள் பெற்றனர்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சந்தித்து பரிசு பெற்ற விவரங்களை ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் முன்னிலையில் செய்து காட்டியும் தெரிவித்தனர்.
இதனைக் கண்டு மகிழ்ச்சியுடன் பள்ளி மாணவர்களின் ஊக்கத்தை பாராட்டி அனைவரையும் வாழ்த்தி அதிகளவில் இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இது குறித்து பயிற்சி அளித்த வேதியியல் ஆசிரியர் சங்கர் கூறுகையில், பார்வைத் திறன் அற்ற அனைவரும் அடுத்தவர் உதவியுடன் இதுபோன்ற புத்தகங்கள் வாசிப்பதை கேட்பதை தவிர்க்கும் வகையில் இது போன்ற ஆடியோ பதிவுடன் புத்தகங்கள் வெளிவந்தால் அவர்களும் அதிக புத்தக ஆர்வலராக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தக நிறுவனம் இதனை சிறப்பாக மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளதாகும் தெரிவித்ததாகவும் ஆசிரியர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.