Close
ஜனவரி 8, 2025 8:06 காலை

திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் 35 லட்சத்து 31 ஆயிரத்து 45 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4, லட்சத்து 86 ஆயிரத்து 536 பேர் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்டார்.

மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 35 லட்சத்து 31 ஆயிரத்து 45 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 17 லட்சத்து 38 ஆயிரத்து 395 பேரும், பெண்கள் 17 லட்சத்து 91 ஆயிரத்து 863 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 787 பேரும் உள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் . கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 912 பெண் வாக்காளர்கள் 1, லட்சத்து 44 ஆயிரத்து 931 வாக்காளர்களும், 40 மாற்று பாலினத்தவர்கள் என மெத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 883 பேர் உள்ளனர்.

பொன்னேரி தனி தொகுதியில் 1 லட்சத்து 30, ஆயிரத்து 462 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 555 பெண் வாக்காளர்கள், மாற்று பாலினத்தவர்கள் 33 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 50 வாக்காளர்கள்.

திருத்தணி தொகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 626 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 32 பேர் உட்பட மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 76 வாக்காளர்கள்.

திருவள்ளூர் தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 765 வாக்காளர்கள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 857 பெண் வாக்காளர்கள், மாற்று பாலினத்தவர்கள் 40 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 662 வாக்காளர்கள் உள்ளனர்.

பூந்தமல்லி தனி தொகுதியில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 66 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 97 ஆயிரத்து 677 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 80 பேர் உட்பட மொத்தம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 823 வாக்காளர்களும்

ஆவடி தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 653 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 33 ஆயிரத்து 663 பெண் வாக்காளர்களும், 92 மாற்று பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளனர்.

மதுரவாயல் தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 230 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 320 பெண் வாக்காளர்களும், 119 மாற்று பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 669 வாக்காளர்கள்.

அம்பத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 234 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 85 ஆயிரத்து 337 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 81 பேர் உள்பட 3 லட்சத்து 68 ஆயிரத்து 652 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

மாதவரம் தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 773 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 45 ஆயிரத்து 645 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 118 பேர் உள்பட மொத்தம் 4 லட்சத்து 86 ஆயிரத்து 536 வாக்காளர்களும் உள்ளனர்.

திருவொற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 252 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 252 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 152 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 656 வாக்காளர்கள் என மொத்தம் 35 லட்சத்து 31 ஆயிரத்து 45 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் 01.04.25, 01.07.25, 01.10.25 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6 ஐ செய்து விண்ணப்பிக்கலாம், மேலும் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் 06.01.2025 முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்கான படிவங்களை வழங்கி பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top