Close
ஜனவரி 8, 2025 2:04 மணி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல்..!

ஈரோடு இடைத்தேர்தல் -கோப்பு படம்

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில், 98வது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. குறைந்த பரப்பளவில், அதிக வாக்காளர்களைக் கொண்ட ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் இடம்பெற்றுள்ளன.

வேட்பு மனுதாக்கல் -ஜன.10

மனுதாக்கல் கடைசிநாள் -ஜன.17

வேட்புமனு பரிசீலனை -ஜன. 18

வேட்பு மனு திரும்பப்பெறல் -ஜன.20

வாக்குப்பதிவு : பிப்.5

வாக்கு எண்ணிக்கை: பிப்.8

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top