Close
ஜனவரி 9, 2025 6:24 மணி

கால்வாய்களை பொதுப்பணி துறையினர் சீர் செய்யவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை வீதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த குறைதீா் கூட்டத்துக்கு வட்டாட்சியா் கௌரி முன்னிலை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா்.

கூட்டத்தில் பயிர் சேத நிவாரண நிதி வழங்கக் கோரியும் தச்சூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்கக்கோரியும் விவசாயிகள் பேசினர்.

தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், புலவன்பாடி, அரையாளம் ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளதால் ஏரிகளில் தண்ணீா் நிரம்பாமல் உள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், இப்பகுதியில் உள்ள ஏரிக்கால்வாய்களின் ஆக்கிரமிப்பை அகற்றி ஏரிக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்ய வேண்டும், ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளதால் மூன்று மாதங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது என விவசாயிகள் குற்றச்சாட்டினர்.

மேலும், ஆரணி இரும்பேடு பகுதியைச் சோ்ந்த விவசாயி சிவானந்தம் , அங்குள்ள காய்கறி சந்தையில் கழிப்பறை கட்டித்தருமாறு கேட்டுக்கொண்டாா்.

மேலும் வேலப்பாடி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள சத்துணவு சமையலறை கூட்டத்தில் குடிநீர் வசதி மின்சார வசதி மற்றும் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. அதனை சீர் செய்து கட்டிடத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

விவசாயிகள் கூறிய புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top