Close
ஜனவரி 9, 2025 6:14 மணி

செங்கம் பகுதியில் திட்ட பணிகள் தொடங்கி வைத்த எம்எல்ஏ

நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்த கிரி எம் எல் ஏ

செங்கம் அருகே ரூபாய் 65 கோடியில் திட்ட பணிகளை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டியை கிரி எம் எல் ஏ மக்கள் பயன்பாட்டிற்கு சிறந்து வைத்து இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் காமராஜர் நகர் பகுதியில் அயோத்திய தாச பண்டிதர் திட்ட மூலம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் ஒரு கிலோ மீட்டர் வரை தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பரமனந்தல் பேருந்து நிலையம் பின்புறம் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணிகளை  துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் ராயண்டபுரம் ஊராட்சியில்  விஜயப்பனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் அங்கன்வாடி மையம் தானிய கிடங்கு முருகன் கோயில் மலை சுற்றும் பாதை மேல்நிலை நீர் தேக்க தொட்டி என ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் ஒன்றிய செயலாளர் துணைச் செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கிளைக் கழக செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top