நாமக்கல் :
நாமக்கல் அறிவுத்திருகோயிலில் உலக அமைதி வார விழா நடைபெற்றது.
நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் அமைந்துள்ள, அறிவு திருக்கோவிலில், உலக அமைதி வார விழா, கடந்த1ம் துவங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைப்பில் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். நாமக்கல் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை செயலாளர் சுப்ரமணியன், இறையுணர்வா, அறநெறியா என்ற தலைப்பில் பேசினார். ஆழியார் விஷன் இணை இயக்குனர் அருட்செல்வி, தவம் செய்ய விரும்பு என்ற தலைப்பில் பேசினார்.
சேலம் அயோத்தியாபட்டணம் ஆர்.எஸ். தவமையம் பேராசிரியர் ராஜேந் திரன், நலம் செய்ய விரும்பு என்ற தலைப்பில் பேசினார். உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் தங்கவேலு, அறங்காவலர் பொறுப்பும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். சென்னை குரோம்பேட்டை சக்திரசரணவன் பருவத்தே பயிர் செய் என்ற தலைப்பில் பேசினார்.
ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மாணவர்களுக்கு மனவளக்கலை என்ற தலைப்பில் பேசினார். ஆழியார் இணை இயக்குனர் விவேகானந்தன், மவுனத்தின் மேன்மை என்ற தலைப்பில் பேசினார்.
உலக அமைதி வார விழாவில், நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள், மனவளக்கலை மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.