Close
ஜனவரி 9, 2025 6:11 காலை

திமுக ஆட்சியில் திருப்பணிகள் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது : தருமபுர ஆதீனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 400 பாடல் பெற்ற ஸ்தலங்களில் 352 பாடல் பெற்ற ஸ்தலங்கள் சாமி தரிசனம் மேற்கொண்ட தருமபுர ஆதீனம் 353 வது பாடல் பெற்ற ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

அவருக்கு திருக்கோவில் சிவாச்சாரியார்கள் தீப தரிசன மண்டபம் அருகே வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட அவர் சம்பந்த கனியாகர் சன்னதியில் சாமி தரிசனம் முடித்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து திருக்கோவிலை வலம் வந்து வணங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனம்;

தமிழ் மாதங்களில் வரக்கூடிய மார்கழி மாதம் மிகவும் முக்கியமான மாதம் ஆகும்.
தட்சணாயணம் உத்திராயணம் என இரண்டு பயணங்களை பிரிப்பதுடன் மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் 6 ருதுகளாக பிரிந்து திருக்கோவிலில் ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது.

பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ள தொண்டை நாடு சோழ நாட்டில் சிறப்பான தரிசனங்கள் முடித்து அடுத்து கொங்கு நாடு பாண்டியநாடு உள்ளிட்ட இடங்களில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் தரிசிக்க உள்ளேன்.

திருவண்ணாமலை மண்ணை மிதித்தால் நமக்கு சார்ஜ் ஏறி விடுகிறது. பல கோவில்களில் உள்ள சிவாச்சாரியார்களுக்கு வருமானம் உதவி தொகையும் இல்லாமல் இருந்தாலும் கூட தங்களது கடமையாக எண்ணி பூசைகளை சரியாக செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டை ஆண்ட எந்த அரசும் செய்யாத அளவிற்கு தற்போது ஆளும் ஆன்மிக அரசு பல கும்பாபிஷேகம் நடத்திக் கொண்டு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மூன்று ஆண்டுகளில் 1000 மேற்பட்ட திருக்கோவில்களுக்கு குடமுழுக்குகளை செய்த அரசு வெள்ளித்தேர் மரதேர் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகப் பணிகளை தொடர்ந்து இந்த அரசு செய்து வருகிறது.

விரைவில் தை மாதம் பிறக்க உள்ள நிலையில் மேலும் பல்வேறு கோவில்களில் தமிழ்நாட்டில் குடமுழுக்கு செய்ய தயார் நிலையில் உள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தங்கள் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் இருந்த சூழலில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 27 பெரிய கோவில்களும் 150 சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தற்போது கோவில் திருப்பணிகள் சுதந்திரமாக செய்யப்பட்டு வருகிறது.

மேலும் திமுக ஆட்சியில் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என கூறினார்.
தொடர்ந்து கூறிய ஆதீனம் தமிழ்நாடு முதல்வருக்கு ஏற்றார் போல் சேகர்பாபு செயல் பாபுவாக மாறி பல்வேறு செயல்களை துரிதமாக செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top