தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை விடுபடாமல் பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அவா்கள் அளித்த மனுவில், தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மன நிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் பொதுமக்கள் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட சில கிராமங்களில் வேட்டி சேலை வழங்கப்படாமல் விடுபட்டது. இது மக்கள் மத்தியில் அரசியல் மீது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே நடப்பாண்டிலாவது வந்தவாசி வட்டம் முழுவதும் எந்த கிராமத்திலும் விடுபடாமல் இலவச வேட்டி சேலைகள் பொங்கலுக்கு முன்பாகவே வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வட்ட வழங்கல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்வன், வட்டாரச் செயலா் அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா் சுகுணா, நகரச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வட்ட வழங்கல் அலுவலா் சரவணனிடம் இந்த மனுவை அளித்தனா்.
முன்னதாக, கோட்டை மூலையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் முன் சென்றடைந்த மாா்க்சிஸ்ட் கட்சியினா், வேட்டி சேலைகளை விடுபடாமல் வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.