Close
ஜனவரி 11, 2025 12:54 மணி

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் பொங்கல் விழா: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலெக்டர் உமா கலந்துகொண்டார்.

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலெக்டர் உமா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில், பொங்கல் திருவிழா நடைபெற்றது. கலெக்டர் உமாக நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். விழவில் பொங்கல் வைத்து படையலிட்டு, கரும்பு, மஞ்சள் தோரணத்துடன் சூரியனுக்கு படைக்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உரி அடித்தல், லக்கி கார்னர், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லெமன் அன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு கலெக்டர் உமா பரிசுகளை வழங்கினார். பொங்கல் விழாவில் டிஆர்ஓ சுமன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top