Close
ஜனவரி 15, 2025 1:06 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் போகி பண்டிகை உற்சாகம்

போகி பண்டிகை உற்சாகம்

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மாதங்களுள் சிறந்தது மார்கழி மாதமாகும். (மாலை) சூடிக்கொடுத்த நாச்சியார் இம்மாத முழுவதும் ஸ்ரீமந் நாராயணனைத் துதித்து நோன்பிருந்து நாடோறும் ஒவ்வொன்றாக முப்பது பாசுரங்களைப் பாடி இறுதி நாளில் நாராயணனைத் திருமணம் புரிந்து வேண்டிய போக போக்கியங்களை அனுபவித்தார்.

ஆகலின் போகிப் பண்டிகை எனக் கொள்ளப்படுமென்பர். இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது.

பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் போக்கி என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி போகி என்றாகிவிட்டது என்றும்,

போகி பண்டிகை என்பது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும், குப்பைகளையும் ஒழிப்பது மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், தீய சிந்தனைகளையும் போட்டு பொசுக்கக் கூடிய நல்ல நாளாக கருதப்படுகின்றது.

தற்போது வட கிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், பனிப்பொழிவு சற்று அதிகரித்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்கவே, போகி பண்டிகை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், ஆரணி, செங்கம், கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் போகி பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே வீடுதோறும் சுத்தம் செய்து, வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும், பழைய துணிகளை வீட்டு முன்பு எரித்தும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சிறுவர்கள் மேளங்களை அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை போகிப் பண்டிகை மூலம் கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை அதிக அளவில் மூடு பணி காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனர்.

கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள வேட்டவலம், சோமாசிபாடி, மேக்களூர், வேடந்தவாடி, கருமாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதேபோல செங்கம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டது.

மேலும், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு பெரும் சிரமத்துடன் சென்றனர்.

மேலும் திருவண்ணாமலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஊட்டி கொடைக்கானல் போன்று பனிப்பொழிவு ரம்மியமாக காட்சி அளித்தது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top