தமிழை வளர்க்கவிட்டாலும் அதனை அழிய விடாமல் காக்க திருவள்ளூர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி செயல் வரவேற்பை பெற்றுள்ளது..
விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் இளம் எழுத்தாளர் பிரபாவதி. கணினி அறிவியல் பட்டதாரியான இவர் காஞ்சிபுரம் மாவட்டம் , சுங்குவார்சத்திரம் பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
பள்ளிக்கால முதலே தமிழ் மீது ஆர்வம் கொண்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக பணிக்கு வந்து பணியில் இருந்தபடியே தமிழ் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு இருந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு சிறுகதைகள் கவிதைகள் என எழுதி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் இவருடைய புத்தகம் ஒன்றை மணிமேகலை பதிப்பகத்தார் இவரின் எழுத்தாற்றலை பிரசுரமாக வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னை முழுவதுமாக தமிழுக்காக இருக்கும் வகையில் தமிழ் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் திருவள்ளுவர் தினம் கொண்டாடும் இந்த தருணத்தில் மெல்ல மெல்ல அழிந்து வரும் தமிழை வளர்க்காவிட்டாலும் அதனை போற்றி பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளதால் தமிழ் மொழியின் அவசியத்தை உணரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தமிழ் குடிலை அமைத்து அதன் மூலம் வேண்டுகோளாக வைப்பதாக தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக இன்றும் உள்ள திருக்குறளை தங்களுடைய காலத்தை விரயம் செய்து உருவாக்கி அதன் மூலம் நமக்கு பல கருத்துக்களையும் வாழ்வியல் முறைகளையும் சொல்லிய நிலையில் அது போன்று, தமிழை நாம் வளர்க்க வேண்டும் எனவும், பிற மொழிகளின் தேவை நமக்கு பணிக்காக இருந்தாலும் தமிழை முழுமையாக வளர்த்து பேணிக்காக்க வேண்டும் என திருவள்ளூர் தினத்தில் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
சிறுவயதில் தங்களின் நிலையை உயர்த்திக் கொள்ளும் இக்காலகட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக இதுபோன்ற விழிப்புணர்வு குடில்களை அமைத்து விழிப்புணர்வு செய்து வரும் இந்த இளம் எழுத்தாளரின் செயலை அனைவரும் வரவேற்போம்..