Close
ஜனவரி 15, 2025 8:42 காலை

அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி விழா

சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் செய்யும் காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலத்தை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.  தைமாதம் முதல் நாள் மகர மாதபிறப்பின் போதுதான் தமிழ்நாட்டில் தைபொங்கல் கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர். மேலும் இந்த காலத்தில் தான் சூரியன் உக்கிரம் ( வெயில் தாக்கம் ) தொடங்குகின்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், தட்சிணாயண புண்ணியகால பிரம்மோற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்று கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெற்று வந்தது.

இந்நிலையில்  உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ நிறைவு நாள் என்பதால் அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

மேலும் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுவாமி வலம் வந்து திருவண்ணாமலை நகரில் உள்ள தாமரை குளத்தின் அருகே எழுந்தருளினார்.

அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமங்கல மந்திரங்கள் முழுங்க வேத வாத்தியங்களுடன் சூலத்திற்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், மூலிகை அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பிறகு சூலத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமாண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top