Close
ஜனவரி 15, 2025 6:38 மணி

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகம் கருகிய நிலையில் ல் மூன்று வாலிபர்கள் உடல்: காவல்துறை விசாரணை

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த மூன்று இளம் வாலிபர்கள் உடலை மீட்டு உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட விழுதவாடி கிராமம் அருகே ஏரிக்கரை தாங்கலில் மூன்று நபர்கள் முகத்தை எரிந்து இறந்த நிலையில் சடலமாக மிதப்பதாக உத்திரமேரூர் காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்து.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், உத்திரமேரூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் சங்கர் சுரேஷ், உத்திரமேரூர் காவல் உதவி ஆய்வாளர் மாரி செல்வம் மற்றும் உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, இறந்த நபர்கள் பழையசீவரம் கிராமத்தை சேர்ந்த விஷ்வா, 17, சத்ரியன், 17,பரத் 17 உள்ளிட்ட உள்ளிட்ட மூன்று பேரும் வாலாஜாபாத் அருகே உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.
இறந்த நபர்கள் மூன்று நாளுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

மேலும், உத்திரமேரூர் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தை சஞ்சய் என்பவர் பழையசீவரம் கிராமத்தை சேர்ந்த பரத் என்பவருடன் பிரச்சினை செய்து வாங்குவதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடல்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த சம்பத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top