Close
ஜனவரி 22, 2025 6:15 மணி

பொங்கல் தொடர் விடுமுறை : கொல்லிமலை, புளியஞ்சோலையில் குவிந்த சுற்றலாப்பயணிகள்..!

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில், கொல்லிமலையின் மறுபுறத்தில் உள்ள புளியஞ்சோலையில், பாய்ந்தோடும் ஆகாச கங்கை ஆற்றில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

நாமக்கல் :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொல்லிமலை மற்றும் புளியஞ்சோலையில் குவிந்து, அங்குள்ள அருவி மற்றும் ஆற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீ. உயரத்தில் கொல்லிமலை அமைந்துள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் மலையில் தங்கி அதன் அழகை கண்டு ரசிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் விடுதி வசதிகள் உள்ளன.

மேலும், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளுக்கு தவறாமல் சென்று நீராடுவது வழக்கம். இந்நிலையில் கொல்லிமலை உள்பட நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலம் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு சுமார் 7 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக இன்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால் வழக்கமான விடுமுறை தினத்தைக் காட்டிலும் கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து ஆகாய கங்கை உள்ளிட்ட அருவிகளில் நீராடிச் சென்றனர்.

இதே போல் கொல்லிமலையின் மறுபுறம் திருச்சி மாவட்ட எல்லையில் புளியஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் விழும் தண்ணீர் புளியஞ்சோலை வழியாக ஆகாய கங்கை ஆறாக பாய்ந்தோடுகிறது. அங்கும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் விடுமுறையையொட்டி, அங்கு நேற்று ஆயிரக்கணக்கான ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து ஆற்றில் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top