Close
ஜனவரி 22, 2025 7:15 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா..!

எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை அதிமுக கிழக்கு மாவட்டம் நகர கழகம் சார்பில் நகர கழக செயலாளர் ஜே எஸ் செல்வம் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் மறைந்த  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் திருவுருவப் படத்துக்கு திருவண்ணாமலை அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், மாவட்ட இணை செயலாளர் உஷா நாதன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

போளூர்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழகச் செயலாளர் ஜெயசுதா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானங்கள் வழங்கினார்.

  இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை,வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், கழக நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்

கீழ்பெண்ணாத்தூர் நகர அதிமுக செயலாளர் முருகன் தலைமையில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு கலங்கரிக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் நகர அதிமுக நிர்வாகிகள், வட்ட செயலாளர் ,பேரூராட்சி கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top