Close
ஜனவரி 22, 2025 11:15 மணி

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாட வீதியில் போக்குவரத்திற்கு தடை..!

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்தை தடை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநிலத் தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன்மற்றும் வியாபார சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர் வேலு பேசுகையில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு குழு அமைக்கப்பட்டு தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது அதன்படி அனைத்து ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் , பேருந்து இயக்குபவர்கள் சங்கம், தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், மாட வீதியில் குடியிருப்பவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது.

அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் திருவண்ணாமலை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுற்றியுள்ள மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை.  இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்க முடிவு,

கோவிலை சுற்றியுள்ள மாடவீதி தெருக்களை ஒட்டி வசிக்கும் உள்ளூர் வாசிகள் வாகனங்கள் சென்றுவர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலமாக தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களது வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்க முடிவு

வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்

வேலூர் அவலூர்பேட்டை சாலையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் அண்ணா ஆர்ச் ஈசானிய மைதானத்திலும் திண்டிவனம் வேட்டவலம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷன் காந்தி நகர் மைதானம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானம்

திருக்கோவிலூர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானம் மணலூர்பேட்டை தண்டராம்பட்டு சாலை இருந்து வரும் வாகனங்கள் எஸ் ஆர் ஸ்டீல் கம்பெனி எதிரில் உள்ள மைதானம்

செங்கம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சந்தை மேடு மைதானம் அத்தி என்று தற்காலிக பேருந்து நிலைய மைதானம் ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோக்கள் சென்றுவர அனுமதிக்கப்படும் வழித்தடங்கள்

காந்தி நகரிலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லும் ஆட்டோக்கள் பாலாஜி நர்சிங் ஹோம் சன்னதி தெரு ராஜம் மருத்துவமனை வழியாக அய்யங்குளம் தெருவில் பயணிகளை இறக்கிவிட்டு ரங்கால் ஆட்சி தெரு வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

ரங்கா லாட்ஜ் சந்திப்பிலிருந்து ராஜம் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி இல்லை

சன்னதி தெருவில் இருந்து கட்டபொம்மன் தெரு வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதி இல்லை

காந்தி சிலையிலிருந்து தேரடி வீதி கடலைக்கடை சந்திப்பு கற்பக விநாயகர் கோவில் வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதி இல்லை.

பழைய மீனாட்சி தியேட்டர் சந்திப்பில் இருந்து ஆட்டோக்கள் ஐயங்குளம் வழியாக சுப்பிரமணியர் சுவாமி கோவில் அருகில் பயணிகளை இறக்கிவிட்டு கரிகாலன் தெரு வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

பெரிய மசூதி மற்றும் கரிகாலன் தெரு சந்திப்பிலிருந்து அய்யங்குளம் தெரு வழியாக ஆட்டோக்கள் செல்ல அனுமதி இல்லை.

அசோக் பில்லர் ரவுண்டானாவில் இருந்து சின்ன கடை தெரு வழியாக பூத நாராயணன் கோயில் சந்திப்பு வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதி இல்லை.

காமராஜர் சிலையிலிருந்து திருமஞ்சன கோபுர தெரு கற்பக விநாயகர் கோவில் வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதி இல்லை.

திருவண்ணாமலை நகருக்குள் செயல்படும் வங்கிகள் தங்களுக்கென சொந்தமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்  பார்க்கிங் வசதிகள் செய்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  திருவண்ணாமலை நகருக்குள் அதிவேகமாக மற்றும் அதிக லோடுடன் செல்லும் வாகனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அண்ணா ஆர்ச் அருகே உள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றிட வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் காவல் துறையினர் நகரின் முக்கிய இடங்களில் பணிபுரிவது அவசியம் அதற்கேற்ப காவலர்களை பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்த புதிய நடைமுறை பிப்ரவரி 1 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் வேலு  அறிவுறுத்தி பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top