Close
ஜனவரி 22, 2025 10:08 மணி

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகம்: எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கம்..!

எருமப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கிய, மாடுபிடி வீரர். (அடுத்த படம்). காளையை அடக்கி வீரர்களுக்கு ராஜேஷ்குமார், எம்.பி., பரிசு வழங்கினார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருமப்பட்டி ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில், பொன்னேரி அருகில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.

இதன் துவக்க விழா இன்று காலை நடைபெற்றுது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரர்களுக்கும், மாடுகளில் உரிமையாளர்களுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் 560 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மாடுகளை பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவும், காயம்படும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஏராளமான ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் கூடிநின்று உற்சாகமாக போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top