Close
ஜனவரி 22, 2025 1:03 மணி

சேந்தமங்கலம் பகுதியில் வரும் 21-ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

கோப்பு படம்

நாமக்கல்:

சேந்தமங்கலம் பகுதியில் வருகிற 21ம் தேதி, செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார சப்ளை நிறுத்தப்படும்.

இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் மற்றும் சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top