திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தை மாதம் பிறந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு திரைப்பட நடிகர் ஜெயம் ரவி சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.
முதலில் சம்பந்த விநாயகர் மற்றும் சாமி அம்பாளை அவர் தரிசனம் செய்தார். அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பிரசாதத்தை வழங்கினர்.
ரவியை பார்த்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரோடு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். அவரும், அனைவருடனும் செல்ஃபி புகைப்படத்திற்கு சிரித்தபடி நின்று போஸ் கொடுத்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வேண்டும் என மனதிற்கு தோன்றினால் திருவண்ணாமலைக்கு வந்து விடுவேன். தாய், தந்தையர் செய்த புண்ணியத்தாலும் மன நிம்மதிக்காகவும் கோயிலுக்கு வந்தேன். மன நிம்மதிக்காகதான் கோயிலுக்கு வருகிறேன். எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்கு வரலாம். தாய், தந்தையுடன் இருப்பது மன நிம்மதி தருகிறது. கடவுளுக்கு நன்றி. எனது அடுத்த படமான ஜினி படம் 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வரும் என்றார்.
தேங்காய் சீனிவாசனின் பேத்தியும் திரைப்பட நடிகையுமான ஸ்ருதிகா சாமி தரிசனம்
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மறைந்த பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும் திரைப்பட நடிகையுமான ஸ்ருதிகா சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாமி தரிசனம் செய்தார். உடன் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.