அருள்மிகு கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் (எ) எம்பார் சுவாமி திருக்கோயில் திருத்தேர் குடமுழுக்கு வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது/
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
அருள்மிகு கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமி திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
இந்த நிலையில் இந்த திருத்தேரானது சிதிலமடைந்ததால் சுமார் 50 ஆண்டுகளாக திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.
அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை மற்றும் உபயதாரர் நிதி கொண்டு 55 லட்சத்தில் திருத்தேரும் , 20 லட்சத்தில் பாதுகாப்பு கொட்டகையும் அமைக்கப்பட்டு இன்று திருத்தேர் குடமுழுக்கு மற்றும் வெள்ளோட்டம் நடைபெற்றது.
புதியதாக உருவாக்கப்பட்ட திருத்தேரை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் இணை ஆணையர் குமார துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து கிராம வீதிகளில் இழுத்து வர திருத்தேர் வலம் வந்தது.
இந்த புதிய தேரில் அருள்மிகு கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
திருத்தேர் 27 அடி உயரம் , 12 அடி அகலம் கொண்டதும் திருத்தேரில் தசாவதாரங்கள் மற்றும் பல்வேறு தெய்வத்திரு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
மதுரமங்கலம் கிராமத்தில் 50 வருடங்களுக்குப் பிறகு இந்த திருதேரானது வலம் வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருத்தேரை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.