திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த அருணகிரி மங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை கட்டுவதற்கு பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: நான் சென்ற முறை அருணகிரி மங்களம் ஊராட்சிக்கு வந்த போது என்னிடம் ஊராட்சி மன்ற தலைவர் வித்யா பிரசன்னா, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பழுதடைந்து விட்டதாள் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சத்திலும் , ஊராட்சி மன்ற பொது நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சத்திலும் மொத்தம் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு இப்போது பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் அதன் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என சரவணன் எம்எல்ஏ பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் , முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி முன்னாள் கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, அரசு கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.