காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் இலவச ரத்த தான முகாம், இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், போதை பொருள் ஒழிப்பு பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள், மேலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த கட்டுரை போட்டிகள், ஓவிய போட்டிகள், கல்லூரியின் பல்வேறு துறைகளின் சார்பாக கருத்தரங்கங்கள், மற்றும் மாபெரும் “அறிவியல் கண்காட்சி” நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று (22.01.2025) பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் அறிவியல் துறைகளின் சார்பாக மாபெரும் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி நிகழ்ச்சியை வேதியியல் துறை தலைவர் முனைவர் ராஜேந்திரன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் வரைவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் முருககூத்தன் கல்லூரியின் வளர்ச்சி, அறிவியல் கண்காட்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்களை பற்றி விரிவாக தலைமை உரையாற்றினார். அதனை தொடர்ந்து வெங்கடேசன் (APO, மாவட்ட கல்வி அலுவலகம் காஞ்சிபுரம்) அறிவியல் கண்காட்சி மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.
அதன் பிறகு மாவட்ட கல்வி அலுவலர் திருமதி வெற்றிசெல்வி இந்த மாபெரும் அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவர்களுக்கு தாங்கள் உயர்கல்விக்கு செல்வதற்கான ஒரு சிறந்த நிகழ்ச்சியாக அமைந்துள்ளது என்றும் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இயற்பியல் துறை தலைவர் முனைவர் ராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த அறிவியல் கண்காட்சியை அரசு மேல்நிலைப்பள்ளி (செட்டி தெரு), அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி (அய்யம்பேட்டை), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (நாயகன் பேட்டை), பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி (மூங்கில் மண்டபம்), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ஏகனாம்பேட்டை) ஆகிய பள்ளியை சார்ந்த 150 மாணவர்களும், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்கள் சுமார் 500 மாணவர்களும் இந்த அறிவியல் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு களித்து பயன் பெற்றனர்.