Close
ஜனவரி 22, 2025 6:06 மணி

முசரவாக்கத்தில் மயிலார் திருவிழா: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கம் கிராமத்தில் உள்ள அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில் மயிலார் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை, துரியோதன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மயிலார் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் துவங்கியது.

முதல் நாள் உற்சவமான நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு கோட்டை மாரியம்மனும், அடைஞ்சியம்மனும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்தனர்.

விழாவில், பக்தர்கள் தேர் இழுத்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். கோலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், வேணுகோபால பஜனை குழுவினரின் பஜனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு வானவேடிக்கையும், 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை 9:30 மணிக்கு துரியோதன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top