திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 108 மூலிகை பொருட்களை கொண்டு நடைபெற்ற சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. இதில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தின் சாா்பில் ஸ்ரீ மகா திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் 108 மூலிகை பொருட்களைக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சதசண்டி ஹோமம் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில், காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவண்ணாமலை சங்கர மடத்துக்கு வந்தாா். மடத்தின் சாா்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மகா திரிபுரசுந்தரி சமேத சந்திர மெளலீஸ்வரா் பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையிலும், தொடா்ந்து நடைபெற்ற யாகத்திலும் பங்கேற்ற அவா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
சதசண்டி ஹோமம்
உலக நன்மை வேண்டியும் ,இயற்கை இடர்பாடுகள் நீங்கவும், உலகம் முழுவதும் சுபிட்சம் மற்றும் அமைதி ஏற்படவும் சதசண்டி ஹோமம் 7 நாட்கள் நடைபெற உள்ளது. 12 கால யாக பூஜைகள் நடைபெற்று பின்னர் பூர்ணாஹுதி செய்ய உள்ளனர்.
நேற்று நடைபெற்ற முதல் கால யாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் 10 க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் கலந்து கொண்டு 108 மூலிகைகளை கொண்டு சதசண்டி ஹோமம் நடத்தி பின்னர் பூர்ணா ஹுதி செய்தனர்.
இந்த சிறப்பு யாகத்தில் திருவண்ணாமலை மட்டும் இன்றி திருவண்ணாமலை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.