Close
ஜனவரி 24, 2025 8:23 காலை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127வது பிறந்தநாள் விழா..!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழா.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் தமிழ் சங்க அலுவலகம் முன்புறம் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் இந்திரராஜன் தலைமை தாங்கினார். அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் திருவண்ணாமலை வட்டாட்சியர் துரைராஜ் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து,  இன்றைய விடுதலைப் போரில் வங்கத்து சிங்கம் நேதாஜிக்கு தனி இடம் உண்டு. மகாத்மா காந்தி அகிம்சை அமைதி வழியில் போராடினார். நேதாஜி ராணுவ படை அமைத்து தீவிரமாக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் என நேதாஜியின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்து பேசினார்.

விழாவில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் தனக்கோட்டி, பேருந்து உரிமையாளர் கோபால், ரோட்டரி சங்க தலைவர் மணி, மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன்,

தலைமை ஆசிரியர்கள் பலராமன், திருக்குறள் சுப்ரமணியன், ஆன்மீக சொற்பொழிவாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் எக்ஸ்னோரா நிர்வாகிகள் வெங்கடேச பெருமாள்,  கிருஷ்ணமூர்த்தி, தமிழ்ச்செல்வி ,பானுமதி ராமமூர்த்தி ,துணை ஆட்சியர் ஓய்வு ஸ்ரீதரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ரெட் கிராஸ் நிர்வாகிகள், எக்ஸ்னோரா நிர்வாகிகள் , திருக்குறள் நெறி பரப்பு மைய நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top