நாமக்கல் :
நாமக்கல்லில் 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், கலெக்டர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார்.
தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். மேலும், பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, நேற்று, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயுதபடை டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில், மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த 90 ஆண், பெண் போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர். அதேபோல் ஊர்காவல் படையினர், சாரண சாரணிய இயக்கம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., பள்ளி, கல்லு?ரி மாணவர்களும் அணிவகுப்பு ஒத்திகையில் கலந்துகொண்டனர்.