வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா ஒலையகுன்னம் கிராமத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் இக்கிராமத்தை சார்ந்த நூறு விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி நெல் மற்றும் உளுந்து ஆகிய பயிர்களை நேரடியாக விற்பனை செய்யாமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை வெகுவாக உயர்த்த முடியும் எனவும். மேலும் அதற்கு கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் தெரிவித்தார்.
மேலும், இயற்கையான முறையில் பயிர் சாகுபடி செய்திட இயற்கை இடுபொருட்களான மீன்அமினோ அமிலம், அமிர்த கரைசல்,ஜீவாமிர்த கரைசல் மற்றும் இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை பயன்படுத்தி மண் தரத்தினை மேம்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்திட கேட்டுக்கொண்டார்.வேளாண்மை அலுவலர் திரு .சரவணன் அவர்கள் உளுந்து சாகுபடி தொழில்நுட்பத்தினை காணொளி வாயிலாக விவசாயிகளிடம் காண்பித்து விளக்கம் அளித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா அவர்கள் டிவிரிடி மற்றும் சூடோமோனஸ் போன்ற உயிர் பூஞ்சால கொல்லிகளின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்தும், திரவ உயிர் உரங்கள் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட நூறு விவசாயிகளுக்கும் டிவிரிடி மானியத்தில் வழங்கப்பட்டது.
பயிற்சிக்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ், அட்மா திட்ட அலுவலர்கள் அய்யாமணி மற்றும் ராஜு ஆகியோ செய்திருந்தனர்.பயிற்சியில் விவசாயிகளுக்கு எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உளுந்து சாகுபடி மற்றும் பூச்சிநோய் மேலாண்மை குறித்த கருத்துக்காட்டியும் ஏற்பாடு வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு மாநில திட்டங்கள் குறித்து கருத்துக்காட்சியில் விளக்கிக் கூறினார்.
பயிற்சி நிறைவாக சமுதாய வள அலுவலர் ஒலயகுன்னம் ரம்யா அக்ரிஸ்டேக் என்னும் விவசாயிகள் பதிவு பற்றி மகளிர் உறுப்பினர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வேளாண் உதவி இயக்குனர் பயிர் பாதுகாப்பு காலண்டரை முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கினார்.