நாமக்கல் :
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடக் கோரி எருமப்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை முற்றிலும் நிராகரிக்க வேண்டும், வரையறுக்கப்பட்ட பயன்தரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை, கடந்த 1.0.2003 முதல் தொடர்ந்து அமல்படுத்திட வேண்டும், தேர்தல் கால உறுதிமொழிகள், போராட்டக்கால வாக்குறுதிகள் மற்றும் வாழ்வாதார மாநாட்டு நம்பிக்கை உறுதி மொழிகளின்படி ஆசிரியர் அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,
டிட்டோஜாக் கூட்டு நடவடிக்கைக் குழுக்களின் கோரிக்கைகளுக்கு உத்தரவு வெளியிடுதல் வேண்டும், தமிழ்நாட்டில் ஆசிரியர் – அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பாஸ்கரன் வரவேறறார். மாவட்ட செயலார் சங்கர் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
மாவட்ட துணைச் செயலாளர் கனகலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். ஒன்றியச் செயலாளர் செல்வராஜு கோரிக்கைகள் குறித்து பேசினார். மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவாஜாய், மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டபாணி உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியப் பொருளாளர் விமலா நன்றி கூறினார்.