நாமக்கல்:
வருகிற பிப். 6ம் தேதி அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது.
இது குறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர் தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த, 2024, டிசம்பர் 31ல் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம், கோவை மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், வரும், பிப்ரவரி 6ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
அஞ்சல்துரை ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை கடிதம் மற்றும் இமெயில் மூலம் ரீஜனல் லெவல் பென்சன் அதாலத் என்ற மேற்கோளுடன், சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கடிதங்கள், இமெயில் வருகிற 30ம் தேதிக்குள் கோட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
மேலும், ஓய்வூதியர்கள் கோட்ட அலுவலகத்தினால் தீர்க்க முடியாத குறைகளை மட்டும் மண்டல அலுவலகத்திற்கு, கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளரின் பதில் கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். வழக்கு (வாரிசு) மற்றும் கொள்கை சம்பந்தப்பட்ட விசயங்களை அதாலத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.