Close
ஜனவரி 31, 2025 3:05 காலை

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா துணை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவிந்தன்,  வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நெல் கொள்முதல் அலுவலர் இந்திராணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் ஆனா நந்தல், இசுக்கழி காட்டேரி, ஆங்குனம், நாரையூர், அகரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவர்.

இவ்விழாவில் விவசாய பிரதிநிதிகள் ,முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரே நாளில் குவிந்த ஆயிரம் நெல் மூட்டைகள்

செங்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரேநாளில் ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.

செங்கம் தாலுகாவில் உள்ள சிறு மற்றும் பெரு விவசாயிகள் பயன்பெறும் விதமாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்ததால் அதிகபடியாக நெல் மகசூல் அடைந்து அதனை பல கிராமங்களில் இருந்தும் செங்கம் பகுதியில் உள்ள தமிழக வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக நேற்று எடுத்து வந்தனர்.

நேற்று ஒரேநாளில் ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு நெல் மூட்டைகளை வாங்கி சென்றனர். நெல் மூட்டையின் விலை ₹1450 முதல் அதிகபட்சமாக ₹1779க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெல் மூட்டை அம்மன் ஆர்என்ஆர் ரக ஏடிடி நெல் மூட்டைகளை அறுவடை செய்து மூட்டை மூட்டையாக எந்த ஒரு இடைத்தரகரின்றி தங்கு தடை இன்றி தங்களின் விலை பொருட்களை எடை குறையாமலும் விலை குறையாமலும் அதிக விலைக்கு விற்பனை செய்து எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் தினசரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கும். எனவே விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top