திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர் வழங்கி கௌரவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 15வது தேசிய வாக்காளர் தினமானது, ‘வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு சென்னை, கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கரன் பாண்டியன் அவர்களுக்கு 18 வயது முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்தமைக்காக சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கான விருது ஆளுநர் வழங்கி கௌரவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்
வாக்காளர்களிடையே தேசிய வாக்காளர் தினம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடையே தேர்தல் தொடர்பான தலைப்புகளில் ஓவிய போட்டி, கடிதம் எழுதும் போட்டி, பாட்டுப் போட்டி மற்றும் ரங்கோலி கோலம் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
மேலும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி உறுதிமொழி கையெழுத்து பலகை வாக்காளர் விழிப்புணர்வு துண்டு சீட்டு விநியோகித்தல் ,விழிப்புணர்வு பலகைகள் வைத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன் தலைமையில் அரசு கலைக் கல்லூரியில் 15 வது தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியர்கள் பங்கேற்று மங்கல இசை,நடனம், தேர்தல் விழிப்புணர்வு பாடல், நாடகம் , தனிநபர் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து தேர்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை டிஆர்ஓ வழங்கினார். மூத்த வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ,முதல் முறை வாக்காளர்கள் போன்ற பல்வேறு நபர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன், மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திருவண்ணாமலை வட்டாட்சியர், கலைக்கல்லூரி முதல்வர், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 15 வது தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சார் ஆட்சியர் பல்லவி வர்மா தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.