வந்தவாசியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ரூபாய் 5.34 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் வழங்கினார்.
ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலை இல்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க வேண்டும் என ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் இடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்த கோரிக்கைகளை பரிசீலித்த நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் தனது ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.34 லட்சம் மதிப்பீட்டில் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஐந்து மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தலை கவசங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் நகராட்சி தலைவர் ஜலால் அவைத் தலைவர் நவாப் ஜான், நகர மன்ற உறுப்பினர்கள் கிஷோர் குமார், பாரி, சந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் சீனிவாசன் , மாவட்ட அணி அமைப்பாளர்கள், கிளை செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர்கள், ஒன்றிய செயலாளர் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.